2 ஆண்டுக்கு பின் நம்பர்-1 ஆகிறார் ஜோகோவிச்

2 ஆண்டுக்கு பின் நம்பர்-1 ஆகிறார் ஜோகோவிச்

பாரீஸ்: சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், 2 ஆண்டுக்குப் பிறகு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க உள்ளார். பிரான்சில் பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் காயம் காரணமாக நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் போட்டியிலிருந்து திடீரென விலகினார். இதன் மூலம், 2வது இடத்தில் உள்ள ஜோகோவிச், 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நம்பர்-1 இடத்திற்கு முன்னேற உள்ளார். நடால் - ஜோகோவிச் இடையே வெறும் 35 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறி இருப்பதால், அவர் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் ஏடிபி தரவரிசைப் பட்டியலில் நம்பர்-1 இடத்தை பிடிப்பது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில், 2ம் இடத்திற்கு தள்ளப்படும் நடால், வரும் 11ம் தேதி லண்டனில் நடக்க உள்ள ஏடிபி டூர் பைனல்ஸ் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்து விட முடியும்.