நவம்பர் 12ல் குறுக்கு விசாரணைக்கு அப்போலோ இதயவியல் நிபுணருக்கு சம்மன்

நவம்பர் 12ல் குறுக்கு விசாரணைக்கு அப்போலோ இதயவியல் நிபுணருக்கு சம்மன்

சென்னை : நவம்பர் 12ல் குறுக்கு விசாரணைக்கு அப்போலோ இதயவியல் நிபுணர் கார்த்திகேசனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 13ல் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், பேங்க் ஆப் இந்தியா கோத்தகிரி கிளை மேலாளர் அலோக் குமார் ஆகியோருக்கும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி உளவுத்துறை ஐ.ஜி. சத்யமூர்த்தியிடம் ஆறுமுகசாமி ஆணையம் மறு விசாரணை நடத்த உள்ளது.