தினகரன், சசிகலா வெளியேற்றவே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியதாக கே.பி.முனுசாமி பேச்சு

தினகரன், சசிகலா வெளியேற்றவே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியதாக கே.பி.முனுசாமி பேச்சு

சென்னை : அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார் என்று  கே.பி.முனுசாமி  தெரிவித்தார். இதையடுத்து எக்காரணம் கொண்டும் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று தெரிவித்த அவர், அதிமுகவினரை குழப்ப வேண்டும் என்ற நோக்கில் தினகரன் பேசி வருகிறார் என்றும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார் என்றும் தினகரனும் சசிகலா குடும்பமும் வந்தேறிகள்; அவர்களை வெளியேற்றவே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியதாகவும் எடுத்துரைத்தார்.