இந்து சமுத்திர சர்வதேச மாநாட்டில் இந்தியா, சீனா தெரிவித்தது என்ன?

இந்து சமுத்திர சர்வதேச மாநாட்டில் இந்தியா, சீனா தெரிவித்தது என்ன?
பூகோள ரீதியாக பொதுவானதொரு சொத்தாகத் திகழும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்குமான சமத்துவத்தன்மையினை உறுதிசெய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்து மகா சமுத்திர கடல்மார்க்கத்திலான செயற்பாடுகள் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நவீன சவால்களாக உருவாகிவரும் விடயங்கள் தொடர்பில் கண்டறிந்து தீர்வுகாண வேண்டும் என சீனா குறிப்பிட்டுள்ளது.