சர்கார் படத்தின் பேனரை கிழித்த அதிமுகவினரை கைது செய்யக் கோரி விஜய் ரசிகர்கள் போராட்டம்

சர்கார் படத்தின் பேனரை கிழித்த அதிமுகவினரை கைது செய்யக் கோரி விஜய் ரசிகர்கள் போராட்டம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ராஜேஸ்வரி திரையரங்கில் சர்கார் திரைப்படத்தின் பேனரை கிழித்த அதிமுகவினரை கைது செய்யக் கோரி விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் சாந்தி திரையரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். முன்னதாக மதுரையில் சர்கார் திரையிடப்படும் தியேட்டர் முன் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். சர்காரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.